search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tournament"

    காயல்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய பூப்பந்து போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையை தொடர்ந்து லீக் முறை ஆட்டத்திற்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. இவற்றில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடத்தை பிடித்து ரூ.40 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை வென்றது. 

    மும்பை மேற்கு ரெயில்வே அணி 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பெற்றது.சென்னை பி.எஸ். அப்துர் ரகுமான் க்ரஸன்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும்,மங்களூர் ஆல்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிறைவு நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

    இதற்கான ஏற்பாடுகளை சுற்றுப்போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் நசீர் அகமது, செயலாளர் மாஸ்டர் பஷீருல்லாஹ், பொருளாளர் கட்டா மரைக்கார், துணைச் செயலாளர் ஷேக் உள்பட பலர் செய்திருந்தனர்.

    காயல்பட்டினம் அலியார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்ட பணிகள் தொடங்கின. 

    அலியார் தெரு பள்ளிக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மெஜில்லா பீரிஸ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஓடக்கரை பள்ளிக்கு ரூ.20.40 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஊர் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான சுகு என்ற அரங்கநாதன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கல் அரசி,தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞரணி செயலாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தி.மு.க. துணை செயலாளர் காதர், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×