search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி-புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு
    X

    முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி-புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 29ம்தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.

    பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற் கான கால அவகாசம் வரும் 29-ந் தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×