என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
- பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
பரமத்திவேலூர்:
நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் உடற் கல்வித் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கலந்து கொண்ட அணிகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசினார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
கபடி போட்டிகளை கந்தசாமி கண்டர் அறநிலையத்துறை தலைவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் கல்லூரி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் கல்லூரி 2-ம் பரிசையும், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி 3-ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி நிர்வாகம் செய்திருந்ததது.






