என் மலர்
நீங்கள் தேடியது "Badminton"
- மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் பிரான்சின் டி.போ போவ்வுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி-பிரான்சின் டி. போபோவ் மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21,17-21 என்ற செட் கணக்கில் தோற்றார். மற்றொரு இந்திய வீரரான சதீஷ் கருணாகரன் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சி.போ போவ்விடம் தோற்று வெளியேறினார்.






