என் மலர்
நீங்கள் தேடியது "players"
- விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் போது விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தேர்வு அறிவிப்பு (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் "Sports Quota" என தேர்வு செய்து சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
- பெண்கள் ஒற்றையரிலும் அமெரிக்காவின் கோகோ காப் உள்பட பலர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் மேட்டியோ பிரெட்டேனி, டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, கிரீசின் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்பட பலர் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினர்.
- வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
- செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
தஞ்சாவூர்:
மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷன்-நில் வாழ்க்கை திறன் மேம்பாட்டுடன் கூடிய கூடைப்பந்து பயிற்சி வகுப்பின் "இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டு நிகழ்வும் தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பவுண்டேஷனின் மாணவன் ஸ்வேதன்ஷூ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
மாமன்னன் ராஜராஜ சோழன்பவுண்டேஷன் சேர்மன் பொறியாளர்இளவரசு முன்னிலை வகித்தார்.
ஜேசி பொறியாளர் சுரேஷ்குமார் தலைவர் தேர்வு, ஜேசிஐ தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமை உரையாற்றினார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷனின் நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவ ருமான 'ஏசியாட்' முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
கௌரவ விருந்தினராக மேகளத்தூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி, சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்இன்னிசை சுகுமாரன் ஆகியோர் மாணவர்கள் எதிர்கா லத்தில் தலைசிறந்த தலைவர்களாக உருவாக தற்காலத்தில் எந்தெந்த பகுதியில் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பேசினர்.
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற 13 வயதுக்கு ட்பட்ட மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து அணிக்கு தலைவராக விளையாடிய கனிஷ்கர் மற்றும் அனிருத்தன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
முடிவில் பவுண்டேஷன் மாணவர் அமுதன் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பான இலச்சி னையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது :-
இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் ஆகியவை சார்பிலும், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், உத்ரகாண்ட், ஜார்கண்ட், பிகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 22 மாநிலங்க ளிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.இப்போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் போட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், போட்டிக்கான லோகோவை வெளியிட்டார்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட பாரா வாலி சங்க தலைவர் ராமநாத துளசி அய்யா வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பாபநாசத்தில் நடைபெற்றது.
- தீயணைப்பு படை அலுவலர்களும், தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட் , பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்றது.
தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பொது மக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்களும் தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.
- வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
- மே 5-ந் தேதி முதல் மே 7ந் தேதி வரையில் நடைபெறுகின்றன.
திருப்பூர் :
மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பத ற்கான திருப்பூா் மாவட்ட ஆடவா், மகளிா் கபடி அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டு ள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது :- செங்கல்பட்டு மாவட்ட த்தில் மாநில அளவிலான ஆடவா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் மே 5-ந்தேதி முதல் மே 7ந்தேதி வரையில் நடைபெறுகின்றன. அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் மகளிருக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் மே 12-ந்தேதி முதல் மே 14ந் தேதி வரையில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்பதற்கான ஆடவா், மகளிா் அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வானது ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
திருவள்ளுவா் நற்பணி மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாநில தொடா் கபடிப் போட்டியில் இருந்து வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப் போட்டியில் பங்கேற்க ஆடவா் 85 கிலோவுக்கு மிகாமலும், மகளிா் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இதில், தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பயிற்சி முகாம் நடத்தி மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.
மேலும், மதுரையில் ஹரியாணா ஸ்டீல்ஸ் புரோ கபடி போட்டிக்கான ஆள்கள் தோ்வு ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் 5 சிறந்த விளையாட்டு வீா்கள் தோ்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பிவைக்க ப்படவுள்ளனா். இந்த புரோ கபடிப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு சிறுவா்களுக்கு மே 25-ந் தேதியன்று 16 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். பள்ளிச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான 70-வது சாம்பியன்ஷிப் போட்டி தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
- கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் தியாக இளையரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அளவிலான 70ஆவது சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு திருக்காட்டுப்பள்ளிசர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் 3-ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
வயது வரம்பு கிடையாது.
தகுதியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.
- எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.
அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தில்லியில் நீதி கேட்கும் மகள்கள், தமிழகத்தில் இருந்து ஆதரவு தரும் தாய்மார்கள் என்ற மவுன அறவழி போராட்டம் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை ரெயிலடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டு தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி தில்லியில் போராடும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:-
ஒன்றுபட்ட இந்தியாவில் நீண்ட நாட்களாக நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.
போராடும் நாங்கள் பெறாத அந்த பிள்ளைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தாய்மார்கள் இருக்கிறார்கள், எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் என்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
- 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.
- ஒவ் வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கின்றோம்.
- தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ஹாரபுதூரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (23), காங்கயத்தை சேர்ந்தவர் லட்சுமண காந்தன் (50). மாற்றுத் திறனாளிகளான இவர்கள், இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வாகியு ள்ளனர். சாகுல் ஹமீது இடதுகைபேட்ஸ்மேன், பவுலர். இவர், ஆல்ரவுண்டர் பிரிவிலும், லட்சுமிகாந்தன் வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் தேர்வாகியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சென்னை அளவில் பல்வேறு மாற்றுத்திற னாளிகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அடுத்த மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிராக நடை பெறும் மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளோம்.
இந்த இரு நாடுகளுக்கு எதிராக நடைபெறும் டி-20 போட்டி களில் பங்கேற்க உள்ளோம். ஒவ் வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கின்றோம். தேர்வுக்குழு எங்களை தேர்வு செய்துள்ளது.எங்களுடன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கார்த்திக் (30), மதுரையை சேர்ந்த சச்சின்சிவா (37) ஆகியோரும் தேர்வாகியு ள்ளனர். ஜூன் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் பங்கேற்கிறோம்' என்றனர். இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் மேலாளர் பி.ஹரிசந்திரன் கூறும்போது, மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம். மதுரையை சேர்ந்த பேட்ஸ்மேன் சச்சின் சிவா கேப்டனாக செயல்பட உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் அலி பயிற்சியாளராக உள்ளார் என்றார்.
- மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
- மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
- அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியா விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு விளை யாட்டு போட்டிகளுக்கு சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விளை யாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகம் 66 சதவீதம் உயர்த்தியுள்ளது.
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான அமைச்சக உதவித்திட்டத் தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அங்கீரிக்கப்பட்டப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.
உணவு, உறைவிடம், உள்ளூர் போக்குவரத்து, சில நேரங்களில் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செலவு உச்சவரம்பு இருக்கும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு நவம்பரில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டதால் உச்சவரம்பு திருத்தியமைக்கப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






