என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கிரிக்கெட் அணி"

    • உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.
    • பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.

    அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    இதற்கிடையே, உரையாடலின்போது வீராங்கனைகள் ஒவ்வொருவம் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியும் பதில் அளித்து வந்தார்.

    அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம்," எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்..? உங்களது தினசரி சரும பராமரிப்பு என்ன?" என்று கேட்டார்.

    ஹர்லீன் தியோலின் இந்த கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

    அப்போது,"நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது" என்று ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா கூறினார்.

    பின்னர் மீண்டும் பேசிய பிரதமர்,"நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன்.

    இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

    • வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
    • 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.

    1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    ×