என் மலர்
இந்தியா

நீங்கள் எப்படி இவ்வளவு பொலிவுடன் இருக்கிறீர்கள்..! மோடியிடம் Skincare Routine பற்றி கேட்ட ஹர்லீன் தியோல்
- உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.
- பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, உரையாடலின்போது வீராங்கனைகள் ஒவ்வொருவம் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியும் பதில் அளித்து வந்தார்.
அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம்," எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்..? உங்களது தினசரி சரும பராமரிப்பு என்ன?" என்று கேட்டார்.
ஹர்லீன் தியோலின் இந்த கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
அப்போது,"நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது" என்று ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா கூறினார்.
பின்னர் மீண்டும் பேசிய பிரதமர்,"நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன்.
இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.






