என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்லீன் தியோல்"
- உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.
- பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, உரையாடலின்போது வீராங்கனைகள் ஒவ்வொருவம் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியும் பதில் அளித்து வந்தார்.
அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம்," எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்..? உங்களது தினசரி சரும பராமரிப்பு என்ன?" என்று கேட்டார்.
ஹர்லீன் தியோலின் இந்த கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
அப்போது,"நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது" என்று ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா கூறினார்.
பின்னர் மீண்டும் பேசிய பிரதமர்,"நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன்.
இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
- ஹர்லீன் தியோல் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- மந்தனா, பிரதிகா ராவல், ரோட்ரிக்ஸ் ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.
மந்தனா 53 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு முதல் அரை சதம் ஆகும்.
அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவுர் ஜோடி நிதானமாக விளையாடினர். கவுர் 22 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைபதிவு செய்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 358 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வதோதரா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி110 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 53 ரன்னில் அவுட்டானார். பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் சிறப்பாக ஆடி முதல் சதத்தை பதிவு செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, பிரதிகா ராவல், டிடாஸ் சாது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






