என் மலர்tooltip icon

    மெக்சிகோ

    • இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
    • இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

    இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
    • கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.

    மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

    கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    • தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

    தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
    • தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.

    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.

    மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.

    • மக்கள் வசிக்கும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    • நிலச்சரிவில் வீடுகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதமடைந்தன.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதம் அடைந்தன.

    பல்வேறு மாநிலங்களில் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், மெக்சிகோவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
    • மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

    நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெற்றம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன.
    • மருத்துவமனைகளும் கடுமையான சேதம் அடைந்துள்ளன.

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழைக்கு 28 பேர் உயிரிழந்தனர்.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

    மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் குறைந்தது ஆயிரம் வீடுகள், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன். 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கின.

    பியூப்லா மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேரை காணவில்லை. கனமழையால் சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக கியாஸ் பைப்லைன் உடைந்து சேதம் ஏற்பட்டது.

    மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வெனிசுலாவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் வீடுகள் சேதடைந்துள்ளது. கடற்படை 900 மக்களை வெளியேற்றி, முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
    • இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதன்பின் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.

    இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி பலியாகினர். 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
    • கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது

    மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

    முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

    முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது

    • இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
    • கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மெக்சிகோவின் குவானா ஜுவாடோ மாகாணத்தில் உள்ள இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாலைவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் அங்கு வந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் ஒரு சிறுவன், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த தாக்குதலுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

    மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, அந்நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த மாதம் குவானாஜு வாடோவின் சான் பார்தோ லோடி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.

    மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

    மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.
    • அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதற்குள் 21 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கிலித் தொடர் விபத்தால் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    ×