என் மலர்
நீங்கள் தேடியது "விமான விபத்து பலி"
- விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் (Gatwick) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 2 பைலட்கள் உள்பட 12 ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
அகமதாபாத்- லண்டன் காட்விக் விமானம் AI171 விபத்துக்குள்ளானது என்று விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பு MAYDAY CALL சென்றுள்ளது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் கொடுத்துள்ளதாகவும், விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார். க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார். சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.
- விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
- பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ரியோ பிரான்சோ:
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.
- மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்தன.
- இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது மற்றொரு விமானம் மீது அந்த விமானம் மோதியது. இதனால் மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்தன. அப்போது அந்த விமானங்கள் தீப்பிடித்ததால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் விமானிகள் உள்பட 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.
- விமான விபத்திற்கான காரணம் பற்றி விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது, அது விபத்தில் சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சுலைமான் அல் மஜித் (வயது 26) உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இணை விமானியாக சுலைமான் இருந்துள்ளார். அவருடன், பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். 2 பேரும் விமான விபத்தில் பலியாகி விட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான சுலைமான், அவருடைய குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கும் ஆவலில் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அவருடைய தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்தனர். விமானம் எப்படி பறக்கிறது என்று பார்வையிட்டனர்.
சுலைமான் வந்த பின்னர், அவருடைய இளைய சகோதரர், அடுத்து செல்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.
பீச்சை ஒட்டி இருந்த கோவ் ரோடனா ஓட்டல் அருகே இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னல் தொடர்பை விமானம் இழந்ததும், பின்னர் அவசர தரையிறக்கம் செய்ய முயற்சித்ததும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் மருத்துவ கூட்டமைப்பில் தீவிர தொடர்பில் இருந்த அவர் தர்ஹாம் கவுன்டி மற்றும் டார்லிங்டன் என்.எச்.எஸ். அறக்கட்டளையில் மருத்துவராகவும் இருந்து வந்துள்ளார்.
இளநிலை டாக்டர்களை பயிற்சி டாக்டர்களாக வகைப்படுத்த கோரியும், முறையான சம்பளம் வழங்க கோரியும் கூட்டமைப்புடன் இணைந்து, அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், விமான விபத்திற்கான காரணம் பற்றி விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது.
- கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர்.
பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் ஹெலிகாப்டர்கள், ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் மைக் சலெர்னோ கூறும் போது, விமானத்தின் கடைசி சிக்னல் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அறியப்பட்ட இடத்தைத் தேடிய போது விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கண்டுபிடித்தனர் என்றார்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது. கடந்த 29-ந்தேதி வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம்-ராணுவ ஹெலிகாப்டர் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். 31-ந்தேதி பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்த தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






