என் மலர்
நீங்கள் தேடியது "flight crash"
- இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது.
- விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நமன் சியால் உடல் தனி விமானத்தில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான இமாச்சலபிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த நமன் சியால் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். அவர் சூலூர் விமானப்படை குடியிருப்பில் தனது மனைவி மற்றும 7 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார்.
தற்போது அவர் விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நமன்சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர். நமன் சியால் உயிரிழப்பால், சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது.
- விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது. விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேஜஸ் போர் விமான்ததில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
- விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார்.
- என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயதான ரமேஷ் என்ற நபர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
இங்கிலாந்தில் பணியாற்றும் ரமேஷ் அந்நாட்டிலேயே வசித்து வந்தார். அன்றைய தினம் இந்தியாவிலிருந்து தம்பியுடன் நாடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார். ரமேஷ் மிகவும் அதிர்ஷ்டசாலி என பலரும் கருதினர்.
விபத்து நடந்த மறுநாள் மருத்துவமனையில் ரமேஷை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்ட ரமேஷ், தனது முதுகெலும்பாக இருந்த சகோதரனை இழந்ததால், உயிர் பிழைத்தது ஒரு சாபம் போல உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு PTSD எனப்படும் நீண்டகால மன அழுத்த நோயால் அவதிப்படுவதாகவும், தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து திரும்பிய ரமேஷ் விபத்தின் பிறகான தனது வாழ்க்கை குறித்து பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், நான் மட்டுமே உயிர் பிழைத்தவன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம்.
நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வலி நிறைந்ததாக இருக்கிறது. என் வீட்டில் தனியாக இருக்க விரும்புகிறேன். என் அம்மா கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் அறைக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார். நான் வேறு யாருடனும் பேசுவதில்லை. என்னால் அதிகம் பேச முடியவில்லை.
நான் இரவு முழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் மனைவி எனக்கு உதவுகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ரமேஷுக்கு ஏர் இந்தியா சார்பில் ரூ. 22 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
- விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனமான ஹனிவெல் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளைக் தடுத்தீர்கள்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. மற்ற விமானி, "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.
விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது. குழுவினர் 14 வினாடிகளுக்குள் அவற்றை 'ரன்' நிலைக்குத் சொடுக்கினாலும், விமானம் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து 32 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இந்த சுவிட்சுகளின் வடிவமைப்பை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சோதனை செய்து அங்கீகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.
- விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் (Gatwick) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 2 பைலட்கள் உள்பட 12 ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
அகமதாபாத்- லண்டன் காட்விக் விமானம் AI171 விபத்துக்குள்ளானது என்று விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பு MAYDAY CALL சென்றுள்ளது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் கொடுத்துள்ளதாகவும், விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார். க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார். சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.
- விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
- பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
- கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.
இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.
ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.
ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
- விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை, இந்திய விமானப்படையில் பழுதுபார்ப்பதற்காக கௌச்சர் விமான ஓடுளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை பாதுகாப்புப் படைகளின் MI-17 ஹெலிகாப்டரில் பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக எடை மற்றும் அதிவேக காற்று காரணமாக MI-17 ஹெலிகாப்டர் சமநிலையை இழக்கத் தொடங்கியது. இதனால், விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டர் கீழே இறக்கிவிடப்பட்டது. அது லிஞ்சோலியில் உள்ள மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
#WATCH | Uttarakhand | While bringing a faulty helicopter from Kedarnath with another helicopter, the helicopter broke down and crashed. There is no loss of life, search operation of SDRF continues: SDRF
— ANI (@ANI) August 31, 2024
(Visuals Source: SDRF) pic.twitter.com/fzUEhHgRFH
- பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது.
- ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு.
பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமான மீது பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. இதனால், விமானம் மீண்டும் பாட்னாவுக்கு தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த சுமார் 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர். தொழில்நுட்ப கோளாறு பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாரணைக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள்.
இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானம் கடலில் விழுவதற்கு முன் பதிவான செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ஜின் இயக்கம் நின்று மின் விளக்கு, ஏ.சி., காற்றழுத்த கருவி போன்றவைகள் செயல்படாததால் பயணிகள் அதிர்ச்சியுடன் கதறினார்கள். இனி பிழைக்க வழியில்லை என்று உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கடவுளை உருக்கமாக வேண்டி அழும் கண்ணீர் காட்சிகள் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை ‘லயன் ஏர்’ விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகி டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பயணம் செய்த விமானிகள் இரண்டு பேரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டை எஞ்சின்களை கொண்ட மிக்-29 போர் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக் ரக போர் விமானங்கள் 1982-ம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #FlightCrash #MiG-29
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானிகள் அவசரகால வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.






