search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helicopter crash"

    • ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின்ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

    அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.
    • அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை நடத்தினார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வந்தனர்.

    மேலும், திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது. அந்த வீடியோ 2021ம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என்றும் அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது 4 பேர் பணியில் இருந்தனர்.
    • வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே தீவுகளுக்கு அருகில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த ஹெலிகாப்டரில் விமானக் குழுவை சேர்ந்த 4 பேர் பணியில் இருந்தனர். விபத்தில் சிக்கிய இவர்களை மீட்பு படை தேடி வந்தனர்.

    இந்நிலையில், கடலுக்கு அடியில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கிரெக் பில்டன் குயின்ஸ்லாந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," விபத்தில் சிக்கி காணாமல்போன 4 பேரின் உடல் பாகங்கள் நீருக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 மீட்டர் (130 அடி) கீழே ஹெலிகாப்டரின் பாகங்கள் உள்பட இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை மனித உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட வாய்ப்பில்லை. வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன. இது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, ஆனால் தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்றார்.

    • எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது.
    • 4 பேரை தேடும் பணி தொடர்வதால் பயிற்சியை இடைநிறுத்தம்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் பெரிதளவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நீரில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

    எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து பேசிய அமைச்சர் மார்ல்ஸ், "விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த 4 பேரை கண்டுபிடிக்கவில்லை" என்றார்.

    4 பேரை தேடும் பணி தொடர்வதால், 30,000 பேர் கொண்ட அமெரிக்க-ஆஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப் பயிற்சியை இடைநிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.

    • நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் 5 பேர் பலி
    • திடீரென ஏற்படும் மேகமூட்டத்தால் விபத்து ஏற்படுகிறது

    இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்காக இவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    இரு தினங்களுக்கு முன் நேபாளத்தில் தனியார் விமான நிறுவனமான மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றில் 5 மெக்சிகோ நாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றனர். எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பும்போது, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 5 பேருடன், நேபாள விமானியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய நேபாள அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஹெலிகாப்டர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு தடைவிதித்துள்ளது.

    அத்தியாவசியமற்ற வான் பயணங்களாக கருதப்படும் மலை விமான பயணங்கள், ஸ்லிங் விமானங்கள் எனப்படும் வெளிப்புற சுமை செயல்பாட்டு விமான பயணங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் பொழிவது போன்ற அனைத்து செயல்களும் செப்டம்பர் வரை தடைவிதிக்கப்படுகிறது" என்று நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAN) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம், சுற்றுலா நகரமான பொக்காரா அருகே ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்களிலேயே, இது மோசமான விமான விபத்தாக பார்க்கப்பட்டது.

    பருவமழை காலமான இந்த நேரத்தில் இத்தடை வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    • ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.

    இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
    • குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

    உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர்.

    அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர்.

    அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

    இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகளை உயிருடன் மீட்கப்பட்டனர்.

    • கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது.
    • இதில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    பொகாடோ:

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர்.

    அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்துக்கு அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இரங்கல் தெரிவித்தார்.

    • ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை தரையிறக்க முற்பட்டார். அதற்குள் அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தெருவில் சென்ற வாகனங்களில் இருந்த பலர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
    • ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

    ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர்ஜெயந்த் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேஜர் ஜெயந்த் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைபடைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்தார். 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.

    பைலட் பயிற்சியில் தேர்வுபெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவகுடியிருப்பில் மேஜர்ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.

    மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தெரிவிக்கையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனைதொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்றார்.

    • அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர். இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் விபத்து நடந்த இடத்தில் கரும்புகை எழும்பியதைக் காண முடிந்ததாகவும், அங்கு ஆம்புலன்சுகள் விரைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகினர்.
    • இந்த விபத்தில் இறந்தவர்களில் உக்ரைன் உள்துறை மந்திரியும் அடங்குவார்.

    கீவ்:

    உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கீவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ×