என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NewYork"

    • மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.
    • மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

    ஏற்கனவே ஜோஹ்ரான் மம்தானி- டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அதே போல் மம்தானியின் வெற்றியை டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ஜோஹ்ரான் மம்தானிக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மம்தானி தனது வெற்றி உரையின்போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்கு சென்றுவிட்டார்.

    அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயார்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்.

    நியூயார்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்.

    ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
    • இதனால் நியூயார்க் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்தது.
    • இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

    இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
    • வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் டமாஸ்கஸ், திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    நியூயார்க்:

    எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் இரண்டு முதியவர்களை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் வல்ஹல்லாவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 70 வயது மிக்க இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலையாளி பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்தார். 



    இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவருமான கிம் யோங்-சோல் நேற்று அமெரிக்காவுக்கு வந்தார். கடந்த 20 ஆண்டுகளில் முக்கிய வடகொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நியூயார்க் நகருக்கு வருகை தந்துள்ள அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKoreaOfficialinUSA #TrumpKimsummit #KimYongchol
    நியூயார்க்கில் 2 குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்ணிற்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #YoselynOrtega
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.

    சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதை கண்ட அவர் அதிர்ர்சியில் உறைந்தார்.



    இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற  ஆர்டிகாவுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது கிரீம் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #YoselynOrtega
    ×