search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா"

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
    வடகொரியா, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    ஜப்பான் பிரதமர் புயிடோ கிஷிடா கூறும் போது, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது தொடர்பாக உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார். வடகொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் வட்சக்கணக்கானோர் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆனால் வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    ×