search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open"

    • 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
    • 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

    2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




    • அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில் 2-வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3-வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4-வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.

    இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக இவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    • பென் ஷெல்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக கரோலினா முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் சொரானா சிர்ஸ்டியா - கரோலினா முச்சோவா மோதின. இந்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
    • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.

    இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
    • கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
    • கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

    இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.

    இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
    • மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார். இதில் சபலென்கா 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பிளிஸ்கோவா, பெலாரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இதில் பிளிஸ்கோவா அபாரமாக விளையாடி 7-5, 6-7, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் பெரேட்டினி வெற்றி பெற்றார்.
    • போகினோவை வீழ்த்திய பெரேட்டினி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயினின் அலெஜாண்டிரியோ டேவிடோவிச் போகினோ ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டில் தோல்வி அடைந்த பெரேட்டினி அடுத்த 2 செட்களை தனதாக்கினார். நான்காவது செட்டை மீண்டும் போகினோ கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பெரேட்டினி வென்றார்.

    இறுதியில், 3-6, 7-6, 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போகினோவை வென்ற பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.

    முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.

    இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
    • 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
    • ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.

    இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.

    இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ×