என் மலர்

  நீங்கள் தேடியது "Caroline Wozniacki"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
  மெல்போர்ன்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

  இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

  இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.  மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

  மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஒரு காலிறுதியில் ஜோகோவிச் (செர்பியா)- நிஷிகோவி (ஜப்பான்) மோதுகிறார்கள். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் லாத்வியா வீராங்கனையை எளிதில் வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ChinaOpen
  சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி இன்று பீஜிங்கில் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் வோஸ்னியாக்கி - தரநிலை பெறாத லாத்வியாவின் செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.

  அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை குயாங் வாங்கை தோற்கடித்திருந்தார். செவஸ்டோவா அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகாவை 4-6, 4-6 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார்.  இதனால் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8-ம் நிலை வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த செவஸ்டோவா வோஸ்னியாக்கியாவிற்கும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் வோஸ்னியாக்கி 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டத்தில் வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #usOpenTennis #CarolineWozniacki
  நியூயார்க்:

  கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து) 7-5, 6-4, 6-9 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் பெரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  செர்பியன் வீரர் ஜோகோவிச் 6-1, 6-3, 6-7 (2-7), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சான்ட்கிரேனை தோற்கடித்து 3-வது சுற்றுக்ழு தகுதி பெற்றார்.

  இதே போல் மரின்சிலிக் (குரோஷியா) நிதிகோரி (ஜப்பான்), கேஸ்குயூட் (பிரான்ஸ்) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை வோஸ்னாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

  அவரை ஸ்சுரேன்கோ (உக்ரைன்) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். 4-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் லார்சனை (சுவீடன்) தோற்கடித்தார். இதேபோல் கார்சியா (பிரான்ஸ்), கீஸ் (அமெரிக்கா), பெர்டென்ஸ் (டென்மார்வ்) சிபுகோலா (சுலோவாக்கியா) ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். #usOpenTennis #CarolineWozniacki
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கரோலின் வோஸ்னியாக்கி முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
  நியூயார்க்:

  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கியும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா ஸ்டோசரும் மோதினர்.

  போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வோஸ்னியாக்கி அபாரமாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இரண்டாவது செட்டை கைப்பற்றும் விதமாக ஸ்டோசர் போராடினார். ஆனால அவரது போராட்டத்தை தடுத்து, இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வோஸ்னியாக்கி கைப்பற்றினார்.  

  இதையடுத்து, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்டோசரை வென்று கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
  ×