search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "American Open tennis"

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் மில்மேனை வீழ்த்தி ஜோகோவிச் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். சிலிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen2018
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 6-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவருமான ஜோகோவிச் (குரோஷியா) கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்மேனை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ந்து 11-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மில்மேன் 4-வது சுற்றில் ரோஜர் பெடரரை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார். கால் இறுதியில் அவரது ஆட்டம் ஜோகோவிச் முன்பு எடுபடவில்லை.

    உலகின் 7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான சிலிச் (குரோஷியா) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 21-ம் நிலை வீரரான நிஷி கோரி (ஜப்பான்) 2-6, 6-4, 7-6, (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    24 வயதான நிஷிகோரி 2014-ம் ஆண்டு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டியில் சிலிச்சிடம் தோற்றதற்கு தற்போது பழி தீர்த்துக் கொண்டார். நிஷிகோரி அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 14-வது வரிசையில் இருக்கும் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் நவரோவை எதிர்கொண்டார். இதில் கெய்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு கால் இறுதியில் 20-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் லெசியாவை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஒசாகா அரை இறுதியில் மேடிசன் கெய்சை சந்திக்கிறார்.

    ஜப்பான் டென்னிஸ் வரலாற்றில் இவை முக்கியமான நாள். அந்நாட்டை சேர்ந்த இருவர் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். #USOpen2018
    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen #rogerfederer
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்மில்மேன் 3-6, 7-5 7-6 (9-7) 7-6 (7-3) என்ற செட் கணக்கில் பெடரரை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார். #USOpen
    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கனேபியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். #USOpen #serenawilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கனேபியை (எஸ்டோனியா) எதிர் கொண்டார். இதில் செரீனா 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தினார். அவர் கால் இறுதியில் செவஸ்டோவை (லாத்வியா) சந்திக்கிறார். செவஸ்டோவா 4-வது சுற்றில் 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனைகளில் ஒரு வரான சுவிட்டோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார். #USOpen #serenawilliams
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், மற்றும் செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpen #Nadal #serenawilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த கரென் கஜோனாவை சந்தித்தார்.

    இதில் நடால் 5-7, 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான டெல் போட்ரா (அர்ஜென்டினா) 7-5, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெர்டஸ் கோவை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரர் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ரோனிக் (கனடா) டொமினிக் தீயம் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (மெரிக்கா) 3-வது சுற்றில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர் கொண்டார்.

    இதில் செரீனா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    3-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற கணக்கில் அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்), பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். #USOpen #Nadal #serenawilliams
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டத்தில் வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #usOpenTennis #CarolineWozniacki
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து) 7-5, 6-4, 6-9 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் பெரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    செர்பியன் வீரர் ஜோகோவிச் 6-1, 6-3, 6-7 (2-7), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சான்ட்கிரேனை தோற்கடித்து 3-வது சுற்றுக்ழு தகுதி பெற்றார்.

    இதே போல் மரின்சிலிக் (குரோஷியா) நிதிகோரி (ஜப்பான்), கேஸ்குயூட் (பிரான்ஸ்) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை வோஸ்னாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    அவரை ஸ்சுரேன்கோ (உக்ரைன்) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். 4-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் லார்சனை (சுவீடன்) தோற்கடித்தார். இதேபோல் கார்சியா (பிரான்ஸ்), கீஸ் (அமெரிக்கா), பெர்டென்ஸ் (டென்மார்வ்) சிபுகோலா (சுலோவாக்கியா) ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். #usOpenTennis #CarolineWozniacki
    ×