search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarter final"

    • 11-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன.
    • 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    வெலிங்டன்:

    9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டகள் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய அணி கள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன. 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16-ந்தேதிகளிலும், இறுதிப் போட்டி 20-ந்தேதி யும் நடக்கிறது.

    • 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.

    திருப்பூர் :

    என்.பி.எல்., எனப்படும் நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட்போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்றுவருகிறது. 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று முன்தினம் முதல் போட்டியில் போஸ் எக்ஸ்போர்ட்ஸ் - அமேஸிங் ஏக்ஸ்போர்ட்ஸ் கார்பரேஷன் அணிகள் மோதின. முதலில் ஆடிய போஸ் எக்ஸ்போர்ட்ஸ், 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமேஸிங் 107 ரன்னுடன் வாகை சூடியது. அதிரடியாக விளையாடி 40 பந்தில் 73 ரன் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு கைகொடுத்த அமேஸிங் அணியின் பேட்ஸ்மேன் அழகர் சாமி, ஆட்டநாயகனாக தேர் வாகினார்.

    வார்ஷா இன்டர்நேஷனல் - டெக்னோ ஸ்போட்ஸ்வேர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வார்ஷா 12.3 ஓவரில் 62 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெக்னோ 65 ரன் எடுத்து வெற்றிபெற்றது. 2ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய டெக்னோ அணி பவுலர் இசாக் ராஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருகிற 11-ந்தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற8அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன. வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் காலிறுதி போட்டிகள்,ஜூலை 2-ந் தேதி அரையிறுதி போட்டிகளும், 9-ந் தேதி இறுதிப்போட்டிகளும் நடைபெறுகின்றன.

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும் காலிறுதிக்கு முன்னேறினர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18-21, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-11, 21-13 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu


    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #IndianWellstennis #Federer #Nadal
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.

    இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.  #IndianWellstennis #Federer #Nadal


    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை எதிர்கொண்டார்.

    இதில் ரபேல் நடால் தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal 
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #JapanOpen #srikanth

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் கொரியாவின் சீ டாங்சிடம் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ##JapanOpen #Srikanth

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கனேபியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். #USOpen #serenawilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கனேபியை (எஸ்டோனியா) எதிர் கொண்டார். இதில் செரீனா 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தினார். அவர் கால் இறுதியில் செவஸ்டோவை (லாத்வியா) சந்திக்கிறார். செவஸ்டோவா 4-வது சுற்றில் 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனைகளில் ஒரு வரான சுவிட்டோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார். #USOpen #serenawilliams
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் கஜகஸ்தானிடம் 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. #AsianGames2018
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி நேபாளத்தை எதிர் கொண்டது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    கால்இறுதியில் கஜகஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.



    துடுப்பு படகு போட்டியில் பிரகாஷ் சர்மா- ஜேம்ஸ்பாய் சிங் ஆகியோர் அடங்கிய அணி 200 மீட்டர் (சி2 ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டி) 9-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. #AsianGames2018
    ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். இதில் நடால் 2-6, 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கரென் கஜோனோவ் (ரஷியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டெபின்ஸ் (கிரீஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogersCup #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.



    இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.



    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomenHockeyWorldCup #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2-வது கோலை திணித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோலாக மாற்றி அசத்தினார். பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

    முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். நடப்பு தொடரில் இந்திய அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மல்லுகட்டுகிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #WomenHockeyWorldCup #India #Ireland 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    ×