search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matches"

    • சிவகங்கை மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 12-ந் தேதி நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்; (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியவை) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை)சிவகங்கை மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் பற்கேற்று வெற்றி பெறும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அத்துடன், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்; வழங்கப்படும்.

    இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று, சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, 04575-241487 என்ற தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள் பாரத் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    சிங்கை:

    மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள், தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது.

    போட்டியை, பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் நெல்லை, தென்காசி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 26 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்குகொண்டு 41 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.

    மேலும் போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர். ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா, டிரஸ்டி ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூலியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் போட்டிகள் நடந்தன.
    • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் திருவுடப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

    பள்ளித் துணைத்தலைவர் பாஸ்கரன் பள்ளி பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர்-விழா அமைப்பாளர் முத்துசெல்வம் காமராஜ பிறந்த நாள் விழா போட்டிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

    இந்த விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, நாடகப்போட்டி, குழு நடனம் மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 46 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பொது அறிவு வினா கேட்கப்பட்டு உடன் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை உணர்த்தும் வண்ணம் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். #IPLChariman #RajeevShukla #India #Pakistan
    புதுடெல்லி:

    இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
    ×