என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajeev Shukla"

    • கான்பூரில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடியது.
    • 2ஆவது போட்டியின்போது சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆஸ்திரேலியா "ஏ" அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நேற்றுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் முடிவடைந்தன. ஒருநாள் தொடர் கான்பூரில் நடைபெற்றது.

    2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.

    2ஆவது போட்டியின்போது ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹென்றி தோர்ன்டன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டது.

    வீரர்களின் உடல் நலக்குறைவுக்கு உணவுதான் காரணம் என ஆஸ்திரேலியா ஏ அணி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா ஏ அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    உணவுதான் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்திய வீர்ரகள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாவது இருந்திருக்க வேண்டும். சிறந்த ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அந்த உணவை சாப்பிட்டார்கள். சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம்.

    அங்கு ஏராளமான ஓட்டல்கள் இல்லை. இதனால் இந்த விசயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 300 அறைகள் கொண்ட 5 நட்டசத்திர ஓட்டல் தேவை. அதுபோன்ற ஓட்டல் இல்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சர்வதேச விமான நிலையம் அங்கு இல்லை. சிறந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், அவர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் இருந்திருக்கும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    • கோலி, ரோகித்துக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் 2027-ம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.

    இதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதுவே அவர்களுடைய கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நாட்டில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட் ரோகித்தை கழற்றி விடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுற்றுலா கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

    அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள். விராட், ரோகித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய பேர்வெல் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆம் அவர்கள் மற்ற 2 பார்மெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்.

    பிசிசிஐயில் எங்களுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்ல மாட்டோம். வீரர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதை நாங்கள் மதிக்கிறோம். விராட் மிகவும் பிட்டாக இருக்கிறார். ரோகித் சர்மா நன்றாக விளையாடுகிறார். எனவே அவர்களுடைய பேர்வெல் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.

    என்று சுக்லா கூறினார்.

    • ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது
    • ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

    இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது. அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.

    • பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார்.
    • சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராக ரோஜர் பின்னி பொறுப்பேற்றார்.

    பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப் பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் 70 வயது உச்ச வரம்பை எட்ட உள்ளதால், பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், பிசிசிஐயின் தற்போதைய துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா ஜூலை மாதத்தில் இருந்து இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செப்டம்பரில் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார்.
    • வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை என பிசிசிஐ-யின் கொள்கை.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று மாலை ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    பிசிசிஐ நெருக்கடி கொடுத்த காரணமாகத்தான் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அது அவருடைய தனிப்பட்ட முடிவு. பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார். வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை அல்லது எந்த ஆலோசனையும் வழங்குவது அல்லது ஏதாவது சொல்வது கிடையாது. இது பிசிசிஐ-யின் கொள்கை.

    நாம் அவரை எவ்வளவு அதிகமாகப் புகழ்கிறோமோ, அது அவ்வளவு குறைவாகவே இருக்கும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நல்ல விஷயம் என்னவென்றால், அவர் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை (ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்). எனவே அவரது அனுபவத்தையும் திறமையையும் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரில் பத்து அணிகள் விளையாடுகின்றன.
    • 2025 ஐ.பி.எல். தொடர் அறிவிக்கப்பட்டது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் 557 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்ததம் 62 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 182 வீரர்கள் ரூ. 639 கோடியே 15 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

    மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

    • காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை.
    • பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் கவுதம் காம்பீர்-கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர்-தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நிராகரித்துள்ளது. (பி.சி.சி.ஐ.)யின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா இது தொடர்பாக கூறியதாவது:-

    காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார். விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும், மோசமாக இருப்பதும் நடப்பதுதான்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19-ந்தேதி இறுதி செய்யப்படும். தேர்வு குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அணியை முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

    மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். #IPLChariman #RajeevShukla #India #Pakistan
    புதுடெல்லி:

    இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

    இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.

    இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவிஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு விஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும். ராகுல் ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
    மாநில அணிக்கு இடம்பெற வேண்டுமென்றால் பெண்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியதாக உபி வீரர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் முஹமது அக்ரம் சைபி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், இவர் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளராக உள்ளார். இவர் பிசிசிஐயில் சம்பளம் பெறும் பணியாளராக இருக்கிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராகுல் சர்மாவிடம் முஹமது அக்ரம் சைபி பணம் மற்றும் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய கேட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார்.

    மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார் என்று உறுதியளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆடியோ பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்துள்ள முஹமது அக்ரம் சைபி, தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ளார். முஹமது அக்ரம் சைபி கூறுகையில், "எனக்கு பெண்ணை அனுப்பியதாக அந்த பையன் சொல்கிறான். அவனுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் அவன் கிரிக்கெட் விளையாடியிருக்கனும். இதுதானே சரி?. அவர் விளையாடினானா? இல்லை. அவன் விளையாடியிருந்தார் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருக்கும்.



    60 பேர் கொண்ட உத்தர பிரதேச அணிக்கான பட்டியலில் அவனது பெயர் இல்லை. அவன் இதுவரை எந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "விரைவில் உண்மை வெளிவரும். நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய மனிதர்களுடன் வேலை செய்கிறேன். அதனால், எல்லா மூலைகளிலிருந்தும் என் மீது பலர் தாக்குதல் நடத்துவது இயல்பு. இது எனக்கு நெருக்கமானவர்கள் உள்பட அதிருப்தியடைந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #RajeevShukla
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று மும்பையில் வருகிற 22-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடக்கிறது.



    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக ராஜீவ் சுக்லா ஒரு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருவதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். மைதானம் வந்தும், வீட்டில் டி.வி.யிலும் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டியை ரசித்து வருகிறார்கள். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்டேடியத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் டி.வி.யில் பார்க்கும் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் அடுத்த நாள் காலையில் தங்களது பணிகளை கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே ஒரு மணி நேரம் முன்னதாக தொடங்கினால் அவர்கள் அடுத்த நாள் தங்களது பணிகளை கவனிக்க எளிதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #IPL2018 #RajeevShukla #tamilnews
    ×