என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அக்டோபர் மாதத்துடன் விராட், ரோகித்தை பிசிசிஐ ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
    X

    அக்டோபர் மாதத்துடன் விராட், ரோகித்தை பிசிசிஐ ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்

    • ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    • கோலி, ரோகித்துக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் 2027-ம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.

    இதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதுவே அவர்களுடைய கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நாட்டில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட் ரோகித்தை கழற்றி விடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுற்றுலா கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

    அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள். விராட், ரோகித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய பேர்வெல் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆம் அவர்கள் மற்ற 2 பார்மெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்.

    பிசிசிஐயில் எங்களுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்ல மாட்டோம். வீரர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதை நாங்கள் மதிக்கிறோம். விராட் மிகவும் பிட்டாக இருக்கிறார். ரோகித் சர்மா நன்றாக விளையாடுகிறார். எனவே அவர்களுடைய பேர்வெல் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.

    என்று சுக்லா கூறினார்.

    Next Story
    ×