என் மலர்
நீங்கள் தேடியது "tag 100652"
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பழங்கரை அடுத்த அணைப்புதூரில் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2008 செப்டம்பர் 1-ந் தேதி,அதன் பின்னர் பிறந்தவர்கள் 14 வயது பிரிவில் பங்கேற்கலாம்.
இம்மாதம் 31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். 2006 செப்டம்பர் 1-ந் தேதி அதன் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள்.
தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, அசல் சான்றுகளுடன் மைதானத்துக்கு வர வேண்டும். இரு தேர்வுகளும் மதியம் 2:30மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
இந்திய வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் தொடர், நேபாளம் நாட்டில் அடுத்த மாதம் 10, 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது. தொடரில் விளையாட தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.
இதில் திருப்பூர், மங்கலம் அக்ஹாரப்புத்துாரை சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு-மணிவண்ணன், அரியலுார் - சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து ஷாகுல் ஹமீது கூறியதாவது:-
மங்கலம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித்திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி, ஓட்டலில் தங்கி, சிகிச்சை பெற்றார்.
- நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறு வதற்காக லண்டன் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷகீன்ஷா அப்ரிடி இடம் பெற்றார்.
இந்த நிலையில், ஷகீன்ஷா அப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.
ஷகீன்ஷா அப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டார். டாக்டர்கள், ஓட்டல் மற்றும் உணவு என அனைத்தையும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தினார்.
எனக்கு தெரிந்தவரை ஷகீன்ஷா அப்ரிடியுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசினார். இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே டி20 உலக கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) கேப்டனாக வீராட்கோலி இருக்கிறார்.
அபாரமான ஆட்டம் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதன் காரணமாக வீராட்கோலி ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அவர் தன்னை பற்றிய செய்தி, படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப் போது பதிவிடுவார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 10 கோடிக்கு மேலாக பின்பற்றப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.
இன்ஸ்டா கிராமில் 3.36 கோடி பேரும், பேஸ்புக்கில் 3.7 கோடி பேரும், டுவிட்டரில் 3.7 கோடி பேர் என மொத்தம் 10 கோடி பேர் கோலியை பின் தொடர்கிறார்கள்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (போர்ச் சுக்கல்) இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.7 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.






