search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student missing"

    • சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜஸ்டன் திரவியம் மகள் பபிதா (வயது16). இவர் பெரியகுளத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பபிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • 17 வயது பிளஸ்-2 மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார்.
    • மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே 17 வயது பிளஸ்-2 மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தமபாளையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மகன் தர்ணேஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ணேஷ் திடீரென மாயமானார்.

    பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கா ததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சங்கிலிமுத்தம்மாள் (67). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி அய்யம்மாள் (70). கணவர் இறந்து விட்ட நிலையில் நோய் கொடுமை யால் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமா னார்.

    இது குறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்ததை பெரியப்பா கண்டித்ததால் பள்ளி மாணவன் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.

    படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
    தேனி அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிணிபிரியா (வயது 17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஹரிணி பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஹரிணி பிரியா தன்னை தேட வேண்டாம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பூவரசு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிணி பிரியாவை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் குள்ளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் அபிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். தாய் கண் விழித்த போது அபிதா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெய மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கோட்டார் பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் சஞ்சய் (வயது9). கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பகுதியில் படிக்கும் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜீவா, 9-ம் வகுப்பு மாணவர் சரண்ராஜ் ஆகியோருடன் நேற்று காலை பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்றான். பின்னர் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் மாயமாகி உள்ளனர்.

    இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    குருவிகுளத்தில் பள்ளி மாணவன் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). விவசாயி. இவரது மகன் மகேஸ்குமார் (17). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி படிக்க செல்கிறேன் என கூறி சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன லட்சுமணன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல இடங்களில் தேடியுள்ளார். 

    எனினும் மகேஸ்குமாரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி லட்சுமணன் குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மகேஸ்குமார் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றுவிட்டார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் .இவரது மகள் வசந்ததேவி (வயது 17). இவர் அணைக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து அவரது பெற்றோர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்ததேவி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

     அரியலூர் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் பிரியங்கா( வயது 14), 9ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் பிரியங்காவை அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் கடத்தி சென்றதாக , ரமேஷ் மீன்சுருட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தானில் பள்ளி மாணவர்கள் 5 பேர் திடீரென மாயமானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Missingcase

    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ளது நாச்சிகுளம். இங்கு அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் ஆத்தூரைச் சேர்ந்த மாணவர் சபரி (வயது 16), விளாம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (16) ஆகியோர் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

    நாச்சிகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டிகுமார் (15), வரிச்சூரைச் சேர்ந்த சதீஷ் (15) ஆகியோர் பிளஸ்-1ம், நாச்சிகுளத்தைச் சேர்ந்த செல்வம் (13) 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இவர்கள் அந்தப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவர்கள் 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு பள்ளிக்கு சரிவர செல்லவில்லை எனத்தெரிகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக விடுதிக்கும் வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் கதிரேசன் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    இந்த நிலையில் மாணவர் ஒருவரின் செல்போன் பெங்களூரில் இருப்பதாக தெரிகிறது. எனவே போலீசார் அங்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    ×