என் மலர்
நீங்கள் தேடியது "Sholavandan student missing"
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ளது நாச்சிகுளம். இங்கு அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் ஆத்தூரைச் சேர்ந்த மாணவர் சபரி (வயது 16), விளாம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (16) ஆகியோர் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.
நாச்சிகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டிகுமார் (15), வரிச்சூரைச் சேர்ந்த சதீஷ் (15) ஆகியோர் பிளஸ்-1ம், நாச்சிகுளத்தைச் சேர்ந்த செல்வம் (13) 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்கள் அந்தப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு பள்ளிக்கு சரிவர செல்லவில்லை எனத்தெரிகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக விடுதிக்கும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் கதிரேசன் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த நிலையில் மாணவர் ஒருவரின் செல்போன் பெங்களூரில் இருப்பதாக தெரிகிறது. எனவே போலீசார் அங்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.






