

உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மகன் தர்ணேஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ணேஷ் திடீரென மாயமானார்.
பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கா ததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சங்கிலிமுத்தம்மாள் (67). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி அய்யம்மாள் (70). கணவர் இறந்து விட்ட நிலையில் நோய் கொடுமை யால் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமா னார்.
இது குறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.