என் மலர்

  நீங்கள் தேடியது "kohli"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
  • கடினமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாக அவர் வந்தார்.

  மெல்போர்ன்:

  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் அதிரடி ஆட்டமே காரணம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  விராட் கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் கோலியின் ஆட்டத்தை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்ட்ரகிராம் வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

  நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும்! என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

  அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் வெளியே வந்தார். உன்னை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரர்களில் புதிய சாதனையை அவர் பெற்றுள்ளார்.

  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) கேப்டனாக வீராட்கோலி இருக்கிறார்.

  அபாரமான ஆட்டம் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதன் காரணமாக வீராட்கோலி ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அவர் தன்னை பற்றிய செய்தி, படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப் போது பதிவிடுவார்.

  இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 10 கோடிக்கு மேலாக பின்பற்றப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.

  இன்ஸ்டா கிராமில் 3.36 கோடி பேரும், பேஸ்புக்கில் 3.7 கோடி பேரும், டுவிட்டரில் 3.7 கோடி பேர் என மொத்தம் 10 கோடி பேர் கோலியை பின் தொடர்கிறார்கள்.

  பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (போர்ச் சுக்கல்) இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.7 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். #RaviShastri #ViratKohli
  துபாய்:

  உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

  அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும். முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4-வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.  இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘டாப்-3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும்.

  கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். அதனால் இப்போதைக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #RaviShastri #ViratKohli
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  205 ரன் குவித்தும் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது குறித்து பந்துவீச்சாளர்கள் மீது கோலி கடுமையாக பாய்ந்துள்ளார். #Kohli #ipl2019

  பெங்களூர்:

  கொல்கத்தா வீரர் ரஸ்சலின் அதிரடியால் பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது.

  பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.

  வீராட்கோலி 49 பந்தில் 84 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் 32 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சுனில்நரீன், குல்தீப்யாதவ், நிதிஷ் ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

  206 ரன் இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பின்னர் களம் இறங்கியது.

  ஆந்தரே ரஸ்சலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 206 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  ரஸ்சல் 13 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்), கிறிஸ் லின் 43 ரன்னும், ராணா 23 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர். சைனி, நெகி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

  17 ஓவர் வரை பெங்களூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது. கொல்கத்தாவுக்கு 18 பந்தில் 53 ரன் தேவை. 18-வது ஓவரிலும், 19-வது ஓவரிலும் ரஸ்சல் அதிரடி ஆட்டத்தை மாற்றினார். 18-வது ஓவரில் 2 சிக்சருடன் 23 ரன்னும், 19-வது ஓவரில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுக்கப்பட்து. ரஸ்சலின் அதிரடியை பெங்களூர் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

  பெங்களூர் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவியது. 205 ரன் குவித்தும் தோற்றதால் பெங்களூர் அணி கேப்டன் கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோலி கூறியதாவது:-

  இந்தப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்போம் என்று நினைத்துக்கூட பார்க்க விலலை. கடைசி 4 ஓவர்களில் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. பவுலர்கள் இன்னும் கொஞ்சம் புத்தாலித் தனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும். கடைசி கட்டங்களில் துணிச்சலாக பந்து வீசவில்லை என்றால் ரஸ்சல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களால் சிக்கல் ஏற்படும்.

  ஒரு வெற்றிக்கூட பெறவில்லை என்பதால் மிகுந்த நெருக்கடியில் உள்ளோம். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதலில் 205 ரன் போதுமானது என்று நினைத்தேன். கூடுதலாக இன்னும் 25 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

  ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை கலந்து ஆலோசிப்போம். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே இதுவரை ஏமாற்றம் தான் மிஞ்சியது.

  இவ்வாறு அவர் கூறினார். #Kohli #ipl2019

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் கோப்பையை வீராட் கோலி வெல்லவில்லை என்று கவுதம் காம்பீர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதற்கு கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார். #kohli #Gambhircomment

  சென்னை:

  இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.

  அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.

  இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-

  ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.

  ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.

  எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.


  நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

  நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வேகப்பந்து வீச்சு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார். #kapildev #indiateam #kohli

  இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

  கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அணியும் தற்போதுள்ள வேகப்பந்து குழு போல் செயல்பட வில்லை. தற்போது அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. இதை நம்ப முடிய வில்லை. இதுபோன்ற செயல்பாட்டையும் தீவிரமான ஆட்டத்தையும் பார்த்ததில்லை. இது கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.


  நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறையபேர் உள்ளனர். இதன்மூலம் இன்னும் திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய முடியும். கோலியின் ஆக்ரோ‌ஷம் நல்ல பயன்களை தருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  2018-ம் ஆண்டு இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 179 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் சேர்ந்து 136 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். #kapildev #indiateam #kohli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvAUS
  மெல்போர்ன்:

  இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

  இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இப்போட்டியில் இந்திய தொடக்க ஜோடியான முரளி விஜய்-லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

  ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்புக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

  டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-ஹனுமா விகாரி களம் இறங்கினர்.

  இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனது. திடீரென்று பந்து பேட்ஸ்மேன் கால் முட்டிக்கு கீழேயும் சென்றது.

  இதனால் விகாரி மிகவும் பொறுமையுடன் விளையாடினார். மயங்க் அகர்வால் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.

  பேட் கும்மின்ஸ் வீசிய பவுன்ஸ் பந்தை விகாரி தவிர்க்க முயன்றபோது கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. விகாரி 66 பந்தில் 8 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

  மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 34 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  உணவு இடைவேளைக்கு பிறகு மயங்க் அகர்வால் 95 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இந்தியா 45-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால் 76 ரன்னில் அவுட் ஆனார். அவர் கும்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டிம்பெய்னிடம் கேட்ச் ஆனார். இந்த ரன்னை மயங்க் அகர்வால் 161 பந்தில் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அறிமுக போட்டியில் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

  அகர்வால் அவுட் ஆனவுடன் தேனீர் இடைவேளையின்போது இந்தியா 54.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 33 ரன்னுடன் களத்தில் இருந்தார்.  தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, கேப்டன் கோலி இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 63-வது ஓவரில் 150 ரன்னை தொட்டது. தொடர்ந்து ஆடிய புஜாரா அரை சதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலியும் அரை சதத்தை நெருங்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் இணை கேப்டனாக சேர்க்கப்பட்டான். இதய கோளாறால் பல்வேறு அறுவை சிகிச்சை செய்துள்ள அவனுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

  இதையடுத்து அவன் ஆஸ்திரேலிய அணியின் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான். டாஸ் போடும்போது கேப்டன்களுடன் சிறுவன் ஆர்ச்சி சில்லரும் வந்திருந்தான். #INDvAUS
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். #rickyponting #ViratKohli

  சிட்னி:

  இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

  இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-

  இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

  கோலி ரன் வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ரன்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை. அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

  மிச்சேல் ஜான்சன் சில முறை கோலிக்கு ஆக்ரோ‌ஷமான பந்துவீச்ச, உடல் செய்கை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.

  உள்ளூரில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு வலிமையாக இருக்க வேண்டும். தற்போதைய அணி ஆக்ரோ‌ஷமான மனபான்மையுடன் ஆடாவிட்டால் அது குப்பைக்கு ஈடாகும். வார்த்தைகள், செயல்கள் ஒன்றாக அமைய வேண்டும்.

  2014-15 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. கோலி 86.26 சராசரியுடன் 692 ரன்களை குவித்தார்.

  நான் அணியின் கேப்டனாக இருந்தால் கோலிக்கு நல்ல தொடக்கம் அமையவிட மாட்டேன். ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கோலியை அதிகமுறை சிரமத்துக்கு உள்ளாக்கினார்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #rickyponting #ViratKohli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்கள் குவிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND
  ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

  ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும், உஸ்மான் கவாஜா அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்று முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவாஜா பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அவரது பேட்டிங் சாதனை அபாரமானது. இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மண்ணில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார்.  விராட் கோலி கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் 692 ரன்கள் குவித்தார். இந்த முறை கவாஜா விராட் கோலியை முந்துவார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் ரன்கள் குவித்தார். இதனால் இந்த தொடரிலும் ரன்கள் குவிப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறப்பானதாகவே அமைந்தது.

  இரண்டு அணிகளின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை விட, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி முடிவுகளை எதிர்த்து சவால் கொடுக்க தேர்வுக்குழுவிற்கு போதுமான அனுபவம் இல்லை என கிர்மானி தெரிவித்துள்ளார். #BCCI
  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டியில் விளையாடிய முரளி விஜய் 4-வது மற்றும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். கருண் நாயர் ஐந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம