டிராவிட்டுக்கு இப்படியா விடைகொடுப்பது? வைரலாகும் வீடியோ

டிராவிட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மா விராட் கோலியிடன் ராகுல் டிராவிட்டை இப்படி செய்யலாம் என கூறினார்.
டிராவிட்டுக்கு இப்படியா விடைகொடுப்பது? வைரலாகும் வீடியோ
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

அவர் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை ரோகித் சர்மா விராட் கோலியிடம் கூறி இதனை செய்தனர். அவர்களது செயலை ராகுல் டிராவிட்டும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com