என் மலர்
நீங்கள் தேடியது "Dinesh Karthik"
- தினேஷ் கார்த்திக் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார்.
- திருமணநாளான நேற்று அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இவர் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணநாளான நேற்று அவர் சமூக ஊடகங்களில் அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதில் "ஆண்டுகள் கடந்தும் நம் இருவரின் முட்டாள்தனத்தால் உண்மையான காதல் வாழ்கிறது டிகே-டிபி தின வாழ்த்துக்கள்," என்று கூறியிருந்தார்.
இந்த டுவிட் சமூக வலைதளங்களில் டிராண்டாகி வருகிறது. இவர்களது திருமணநாளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜெயிலர் படத்தை மிகவும் ரசித்தேன். சூப்பர் ஸ்டார் மிகவும் சிறந்தவர். நெல்சன் மீண்டும் நிரூபித்துவிட்டார். டார்க் காமெடி காட்சிகளை மிகவும் ரசித்தேன். பின்னணி இசையும் அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
- வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
- இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.
அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார்.
- 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
- இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) நடராஜன் திருச்சி அணியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
- இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 3 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்னில் சுருண்டது.
முன்னதாக முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக மந்தீப் சிங், சுனில் நரேன் (15 முறை) உள்ளனர்.
- சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர்.
- சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 2-வது ஒரு நாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர். அவரை அணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக அவர் களமிறங்கும் இடத்தை வேண்டுமென்றால் மாற்றலாம். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாட விருப்பம் கொண்டவர்.
ஆதலால், அவருக்கு 4-வது இடம் கொடுத்துவிட்டு, சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும். அவர் கடைசி 18 முதல் 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார். ஆகையால் அதற்கேற்ப அவரை பயன்படுத்திக் கொண்டால் அணிக்கு நல்லது.
என்று அவர் கூறியுள்ளார்.
- தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் லோகேஷ் ராகுலை போன்ற நிலைமை தனக்கு வந்துள்ளதாகவும் அப்போது தான் அழுததாகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் ராகுல் திறமையான வீரர். 3 விதமான போட்டிகளில் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அவருடைய ஆட்ட நுனுக்கத்தில் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.
தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு ஓய்வுக்கு பிறகு அவர் திரும்ப வந்தால் அவரால் மிக சிறப்பாக விளையாட முடியும்.
ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும். எனக்கு இதே போன்று நிலைமை ஏற்பட் டது.
அப்போது எனக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸ் என்று நினைத்து வீரர்கள் அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்று ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினேன். அந்த அளவுக்கு அந்த சூழ்நிலை மோசமாக இருக்கும். அதனையும் நான் அனுபவித்தேன்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியில் திரிபாதி சிறப்பாக விளையாடுவார்.
- பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தான் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்று சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டிய நேரம் வரும் போதோ அல்லது அவர் இல்லாத போதோ அவருக்குப் பதிலாக 3-வது இடத்தில் விளையாடுவதற்கு ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் ராகுல் திரிபாதி விளையாடினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருவரும் விளையாடியிருக்கின்றனர். அப்போது ராகுல் திரிபாதியின் பேட்டிங் திறமையை தினேஷ் கார்த்திக் கண்டுள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் நன்றாக விளையாடினாலும், சரி விளையாடாவிட்டாலும் சரி, இந்திய கிரிக்கெட் அணியில் அவர் சிறப்பாக விளையாடுவார்.
விராட் கோலி விளையாடினார் என்றால் ஓகே. மற்றபடி அவரது இடத்தை நிரப்புவதற்க்கு முதல் வாய்ப்பாக ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார்.
என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.