

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் கபீர் மற்றும் ஜியான் உள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
எங்கள் இதயங்களில் ஆசீர்வாதத்துடன் மற்றும் அளவற்ற நன்றியுடன், எங்கள் செல்ல மகளை உலகிற்கு வரவேற்கிறோம். கபீர் மற்றும் ஜியான் அவர்களின் தங்கையை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்” என்று தினேஷ் கார்த்திக் - தீபிகா பலிக்கல்லை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மகளுக்கு “ராஹா பல்லிக்கல் கார்த்திக்” (Raaha Pallikal Karthik) என அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.