என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மாவின் ஓய்வு அவரது தனிப்பட்ட முடிவு: பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை- ராஜீவ் சுக்லா
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார்.
- வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை என பிசிசிஐ-யின் கொள்கை.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று மாலை ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிசிசிஐ நெருக்கடி கொடுத்த காரணமாகத்தான் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அது அவருடைய தனிப்பட்ட முடிவு. பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார். வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை அல்லது எந்த ஆலோசனையும் வழங்குவது அல்லது ஏதாவது சொல்வது கிடையாது. இது பிசிசிஐ-யின் கொள்கை.
நாம் அவரை எவ்வளவு அதிகமாகப் புகழ்கிறோமோ, அது அவ்வளவு குறைவாகவே இருக்கும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நல்ல விஷயம் என்னவென்றால், அவர் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை (ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்). எனவே அவரது அனுபவத்தையும் திறமையையும் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.






