என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாவட்டங்களுக்கிடையேயான போட்டிகள்: கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ பள்ளி சாதனை
- மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள் பாரத் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது.
- போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.
சிங்கை:
மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள், தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது.
போட்டியை, பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் நெல்லை, தென்காசி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 26 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்குகொண்டு 41 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.
மேலும் போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர். ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா, டிரஸ்டி ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூலியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.