search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cambridge"

    • தரைவழியாக ஊடுருவும் ரேடார் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன
    • 900 வருடங்களுக்கு முற்பட்ட நகர் கண்டறியப்பட்டது என டாக்டர். லவ்னாரோ கூறினார்

    பண்டையகால நாகரிகங்களில் சரித்திர புகழ் வாய்ந்தவை கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள்.

    ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மனித நாகரிக வளர்ச்சியை கண்ட நாடு. இதற்கு சான்றாக இத்தாலி முழுவதும் பழமை மாறாத கட்டிங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge University) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, டாக்டர். அலெஸ்ஸாண்ட்ரோ லவ்னாரோ (Dr. Alessandro Launaro) தலைமையில் மத்திய இத்தாலியில் உள்ள இன்டராம்னா லிரெனஸ் (Interamna Lirenas) எனும் இடத்தில் அகழ்வாரய்ச்சிகள் நடத்தியது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பல இடங்களில் தரைவழியாக ஊடுருவும் திறன் வாய்ந்த ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வுகளை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சியாளர்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலகட்ட நகரமான லாசியோ பகுதியில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது பயிர் நிலங்களாக உள்ள இந்நகர் அக்காலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை கொண்ட நகரமாக விளங்கியது தெரிய வந்துள்ளது.


    "எவரும் இதற்கு முன்பு தோண்டி பார்க்க முயற்சிக்காத பகுதியில் எங்கள் ஆய்வை தொடங்கினோம். தோண்டிய பிறகு முதலில், மேற்புரத்தில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில உடைந்த மண்பானைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், கீழே நீர் நிலைகள் தோன்றவில்லை. 900 வருட பழமை வாய்ந்த நகரத்தின் அறிகுறிகள் காணப்பட்டன" என டாக்டர். லவ்னாரோ தெரிவித்தார்.


    லிரி நதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியில், ஒரு கிடங்கு, வழிபாட்டு தலம், 1500 பேர் அமர கூடிய கலையரங்கம், பண்ணை விலங்குகளுக்கான 19 திறந்தவெளி கூடங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


    எந்த போரினாலும் இந்நகர் அழிக்கப்பட்ட தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற லொம்பார்ட் படையெடுப்பின் போது இந்நகரில் வாழ்ந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    • மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள் பாரத் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    சிங்கை:

    மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள், தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது.

    போட்டியை, பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் நெல்லை, தென்காசி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 26 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்குகொண்டு 41 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.

    மேலும் போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர். ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா, டிரஸ்டி ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூலியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    ×