என் மலர்
நீங்கள் தேடியது "இத்தாலி"
- தனது தாயை போல் பெண் வேடமிட்டு ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.
- தாயை போல் வேடமிட்டு ரூ.80 லட்சம் ஓய்வூதியத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த 56 வயதான நபர், இறந்த தனது தாய் போல் வேடமிட்டு அவரது ஓய்வூதிய தொகையை பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் தாய் கிராசியெல்லா டால்ஓக்லியோ கடந்த 2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவரது ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெற எண்ணிய மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்து உள்ளார்.
அதன்பின் தனது தாயை போல் பெண் வேடமிட்டு ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே அரசு அலுவலகத்தில் கிராசியெல்லாவின் அடையாள அட்டையை புதுப்பிக்க அந்த நபர் பெண் வேடத்தில் சென்றார். அப்போது அவர் மீது ஒரு ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த நபரின் கைகளில் உள்ள தோல் 85 வயது முதியவரின் தோற்றத்தைப் போல் இல்லை என்பதையும் சுருக்கங்கள் விசித்திரமாக இருந்ததையும் ஊழியர் கவனித்தார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு வந்து விசாரித்தபோது தாயை போல் வேடமிட்டு ரூ.80 லட்சம் ஓய்வூதியத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கிராசியெல்லா உடலையும் மீட்டனர்.
- மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
- அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது
இத்தாலியின் மிலன் நகரில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. எனவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17-ந் தேதி மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி வருவதால் தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
- ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மடேரா நகரின் ஸ்கான்சானோ யோனிகோ பகுதியில் ரெனால்ட் ஸ்கெனிக் வகை கார் ஒன்று, சரக்கு லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான காரில் மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது.
- இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது.
இத்தாலியில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துள்ளன வீடியோ வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை, பிரெசியா நகருக்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது. விமானி உட்பட இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். மேலும் விமானம் வெடித்ததில் இரண்டு பைக்கர்கள் காயமடைந்தனர்.
அவசரமாக தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஃப்ரெசியா ஆர்ஜி அல்ட்ராலைட் விமானம் கார்பன் ஃபைபரால் ஆனது. இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது. விமானம் அதிவேகத்தில் சாலையில் மோதிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
- இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
- டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.
- இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர் எடி ராமா முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
- குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
- இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

"அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
- இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்
ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.
இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.
இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.
இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.
அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.
இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.
இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.






