என் மலர்
நீங்கள் தேடியது "போப் ஆண்டவர்"
- வாடிகன் சிட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போப் லியோ பதவியேற்றார்.
- போப் லியோவை சந்திக்க நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் வாடிகன் சென்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் சின்னர் உடன் மோதுகிறார்.
இந்நிலையில், வாடிகன் சிட்டியில் புதிதாகப் பதவியேற்ற அமெரிக்காவை சேர்ந்த போப் லியோவை, நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் இன்று நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னர், இது மிகப் பெரிய கவுரவும் என பதிவிட்டுள்ளார்.
புதிய போப் லியோ டென்னிஸ் ரசிகர் என்பதும், 3 மாத தடைக்குப் பிறகு இத்தாலி ஓபன் தொடரில் சின்னர் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.
- புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப் ஆக லியோ XIV மே 8 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.
புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அவர் வரவேற்றார்.
இன்னொரு போர் ஒருபோதும் வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். போப் லியோ தனது உரையில் உலகெங்கிலும் உள்ள மோதல்கள் குறித்தும் பேசினார்.
அவர் தனது உரையில், காசாவில் துன்பப்படும் மக்களையும், உக்ரைனில் நடந்த போரினால் இயல்பு வாழ்க்கையை இழந்த மில்லியன் கணக்கான மக்களையும் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் அமைதியின் அதிசயம் நிகழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்
- போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
- புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய போப்-ஆக தேர்வான 14ம் லியோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் 14ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
- முதல் நாள் நடந்த வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
- முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.
இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி, இன்றும் 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரண்ட நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
We have a pope என வாடிகனில் உள்ள தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்ந்தெடுத்தனர்.
- போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள்.
- அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.
வாஷிங்டன்:
உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:-
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.
அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை.
இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.
- 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்
- இவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று முதல் வைக்கப்படுகிறது.
வாடிகன் :
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் உடல் வைக்கப்பட்டது.
- 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்.
வாடிகன் சிட்டி:
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் 5-ம் தேதி காலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
- முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.
ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
- தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு (வயது 88) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிசுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சுவாசக்குழாய் தொற்றுக்கான சிகிச்சையை டாக்டர்கள் மாற்றியுள்ளனர், தேவைப்படும் வரை போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் இருப்பார். அவருக்கு காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது. அவர் சில வேலைகளைச் செய்தார். பத்திரிகைகளைப் படித்தார்" என்று தெரிவித்துள்ளது.
- போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.
- இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாடிகன்சிட்டி:
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-
அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.






