முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் இறுதிச் சடங்கு 5-ந்தேதி வாடிகனில் நடக்கிறது

600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் இவர்இவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று முதல் வைக்கப்படுகிறது.
முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் இறுதிச் சடங்கு 5-ந்தேதி வாடிகனில் நடக்கிறது
Published on

வாடிகன் :

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.

முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com