என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீட்சா"
- அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
- இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இத்திரைப்படம் சை ஃபை காமெடி படமாக அமைந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
அந்த வரிசையில் இந்நிறுவனம் "பிட்சா 4 - ஹோம் அலோன்" திரைப்படத்தையும் "இன்று நேற்று நாளை" இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
டைம் டிராவல் கதையம்சம் கொண்ட "இன்று நேற்று நாளை" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்படும் உணவு சீஸ்.
- உணவு தயாரிப்புகளில் கூடுதல் சுவைக்காக சீஸ் சேர்க்கப்படுகிறது.
சீஸ் என்னும் பாலாடைக்கட்டியை உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒரு பிரபலமான மற்றும் சுவையான உணவுப் பொருளாகும். தோசை, பீட்சா என திரும்பும் திசையெல்லாம் இப்போது சீஸ் தூவ ஆரம்பித்து விட்டனர். அந்தளவிற்கு உணவுப்பிரியர்களின் விருப்பமாக இருக்கும்.
பாலாடைக்கட்டி லேசான கிரீமி முதல் கசப்பானது வரை என பல்வேறு வகையான சுவைகளில் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. அதன் மாறுபட்ட சுவை தன்மையின் அடிப்படையில், பல சமையல் உணவு தயாரிப்புகளின் கூடுதல் சுவைக்காக இது சேர்க்கப்படுகிறது.
கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு சீஸ் ஒரு நல்ல உணவாகும். எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியம்.
சீஸ் என்றாலே உயர்தர புரதத்தின் மூலம் எனலாம். இது அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது, இது ஒரு மதிப்புமிக்க உணவு புரத ஆதாரமாக அமைகிறது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு. இதில் அதிகளவு புரோட்டீன்கள் உள்ளது.
பாலாடைக்கட்டி கால்சியத்தின் உணவு ஆதாரங்களில் ஒன்றாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க உதகிறது. சீஸ் சாப்பிடுவது உங்கள் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
சாலடுகள் மற்றும் சாண்ட்விச்கள் முதல் பீட்சாக்கள் மற்றும் பாஸ்தா வரை பலவகையான உணவுகளில் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. அதன் உருகும் பண்புகள் உணவுகளின் அமைப்பு மற்றும் சுவையை மேம்படுத்துவதற்கு உதவுவதால் சீஸ் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது.
சீஸில் அதிக புரதம் மற்றும் கொழுப்பு உள்ளதால், அவற்றை உண்ட பிறகு எல்லோருக்கும் ஒரு முழுமை உணர்வு கிடைக்கச் செய்யும். இது பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையினை நிர்வகிக்கவும் உதவும்.
தயிர், கேஃபிர் போன்ற சில பாலாடைக்கட்டிகள் மற்றும் கவுடா போன்ற சீஸ்கள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளைக் கொண்டிருக்கின்றன.
சில உணவுப்பொருள்கள் மற்றவருடன் இணைக்கும் போது அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சீஸ் இதுக்கு விதி விலக்கு. ஒயின், பழங்கள் மற்றும் ரொட்டி போன்றவற்றுடன் சீஸ் சேர்ப்பது சுவையினை அதிகரிக்குமே தவிர கெடுக்காது.
பாலாடைக்கட்டியை (சீஸ்) மிதமாக உட்கொள்வது முக்கியம், ஏனெனில் அதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சீஸை தங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது அவசியம்.
- பீட்சாவில் 940 வகையான பிரஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் இடம்பெற்றுள்ளன.
- பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு ‘பீட்சா’வை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
புதுப்புது உணவு வகைகள் சமைப்பதிலும் சமையல் நிபுணர்கள் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு 'பீட்சா'வை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்த பீட்சாவில் 940 வகையான பிரஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் இடம்பெற்றுள்ளன. இந்த 'பீட்சா' குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.
அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.
When we decided to order from @dominos during the Bangalore choke. They were kind enough to track our live location (a few metres away from our random location added in the traffic) and deliver to us in the traffic jam. #Bengaluru #bengalurutraffic #bangaloretraffic pic.twitter.com/stnFDh2cHz
— Rishivaths (@rishivaths) September 27, 2023
வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.
வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.
போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.
- பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
- உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கு
ரவை - 1/4 கப்
தக்காளி - 2 கப்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 கப்
உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
- மீதமாகிய சப்பாத்தியை வைத்து ‘கப் பீட்சா’ செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
எண்ணெய் - 2 கப்
மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்
சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்
பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் பழம் - 5
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள்.
சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம்.
கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும்.
அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- விருப்பப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல
- அதிக அளவில் இதைச் சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப்
ஈஸ்ட் - 5 கிராம்
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய:
பீட்ஸா சாஸ் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - 1
கேரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.
பீட்ஸா பேஸ் ரெடி.
இப்போது பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும்.
பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.
பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும்.
ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும்.
பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.
இப்போது சூப்பரான பீட்சா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்