என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏப்ரல்"
- தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
- இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.
மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.
இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் பையா திரைப்படம் வெளியானது
- இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.
இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் 'பையா' திரைப்படம் ரீரிலீஸை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து பையா பட அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
- இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இத்திரைப்படம் சை ஃபை காமெடி படமாக அமைந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
அந்த வரிசையில் இந்நிறுவனம் "பிட்சா 4 - ஹோம் அலோன்" திரைப்படத்தையும் "இன்று நேற்று நாளை" இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
டைம் டிராவல் கதையம்சம் கொண்ட "இன்று நேற்று நாளை" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
- ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது அல்லுஅர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
அவருக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமந்தா தெரிவித்த வாழ்த்து பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புள்ள ராஷ்மிகா உங்களுக்கு இது மற்றொரு அழகான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.
தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்மிகா. உங்களுக்கு இது சிறந்த ஆண்டாகவும் நிறைய அன்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சக நடிகையான ராஷ்மிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
இவ்வாறு ஏராளமான நடிகர், நடிகைகள் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிறந்த நாளையொட்டி புஷ்பா 2 படக் குழுவினர் படத்தில் ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.
அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.
இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்
- புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
இதுவரை பார்த்திபன் 15 படங்களை இயக்கியுள்ளார்., 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பார். இதில் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாகும். இப்படத்தை இயக்கி நடித்தற்காக மிக பெரிய பாராட்டை பெற்றார் பார்த்திபன்.
பின் 2022 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டீன்ஸ்' படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.
- இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆடம்ஸ் அறிமுகமானார். இவர் சன் டிவியில் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கினார். இவரின் ஜாலியாக பேசும் திறமையும் , முக பாவனையும் மக்கள் மனதை கவர்ந்தது.
பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பயணம் செய்தார், சன் டிவியின் சிவ சக்தி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமாகினார், தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.
பிரபல தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் படத்தின் திரைக் கொண்டாட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஆடம் தொகுத்து வழங்குவார். பின் படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். கேன் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் நடித்து இருக்கும் முன்னணி கதாப்பாதிரங்களின் முகத்தை வைத்து ஒரு வித்தியாசமான ஃபர்ஸ் லுக்காக உருவாக்கியுள்ளார்.
கோவை சரளா, கலையரசன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், அக்ஷரா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது என்பது குறிப்படத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனர். அவரின் கதை, திரைக்கதை மற்றும் அதை படமாக்கும் விதம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இவர் இயக்கிய சாமி, கோவில், தாமிரபரணி, வேல், சிங்கம் படங்கள் ஹிட்டாகியது.
தற்பொழுது ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியுள்ளார். விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹரியின் மகனான ஸ்ரீராம் ஹரி 'ஹும்' என்ற பைலட் {Pilot} படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் இறுதி ஆண்டு படித்து வரும் ஸ்ரீராம் அவரின் ப்ராஜக்டிற்காக இந்த படத்தை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா.
- இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது.
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.
இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
- ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.
விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்