'பையா' ரீரிலீஸ் - தமன்னாவை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் பையா திரைப்படம் வெளியானதுஇத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது
'பையா' ரீரிலீஸ் - தமன்னாவை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் லிங்குசாமி
Published on

லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.

இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'பையா' திரைப்படம் ரீரிலீஸை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து பையா பட அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com