பேபி ஷவர் கொண்டாடிய அமலா பால்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பேபி ஷவர் கொண்டாடிய அமலா பால்
Published on

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com