search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி"

    • தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.

    நாகர்கோவில் : தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:- தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் 15 மீனவ கிராமத்தில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வெளியே மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக தேங்காய்பட்டினம் துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்பட்டினம் துறை முகத்தில் உள்ள தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அனைத்து மீனவர்களும் தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படுகிற மானிய விலை மண்எண்ணையை தகுதியான அனைத்து மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதா வது:-

    தேங்காய்பட்டினம் துறைமுக பணிகள் தொடர்பாக கண்காணிக்க 15 கிராமங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாதத்திற்கு 2 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல் பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்களை அழைத்துபேசி கூடுதலாக கற்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கற்கள் அதிகமாக கொண்டு வரப்படும்போது பணிகள் விரைவாக முடிக்கப்படும். தகுதியான நபர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

    மீன்வளத்துறை அதிகாரி கூறுகையில், தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் செயல் பட்டு வந்த தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு கரண்ட் பில் கட்டியதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட் டுள்ளது. கடந்த 3 மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட் டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். கூட்டத்தில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோரிக்கையை மனுக்களை முதலில் பெற்றுவிட்டு அது தொடர்பான பதில்களை பேசிவிட்டு விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


    • தீடீரென கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்தது.
    • திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). மீன்பிடிக்கும் தொழிலாளி.

    இவர் வழக்கம் போல் கொள்ளிடத்தில் மீன்பிடிப்ப தற்காக அங்குள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து கொண்டு தனது மீன்பிடி வலையின் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது தீடிரென கொள்ளிட ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து தண்ணீரில் இழுத்து சென்றது.

    அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் துரிதமதாக செயல்பட்டு ரவியை முதலையிடமிருந்து மீட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ரவியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

    இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது
    • மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்;

    கன்னியாகுமரி :

    மீன்களின் இனப் பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதி யில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொ டர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த சில நாட்களாக ஆயத்தமானார்கள்.

    இதற்கிடையில் 3 நாட்கள் கடலில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 300 விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

    தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவர்கள் பிடித்து வரும் உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்டங்கள்மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சின்ன முட்டம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்ட தொடங்கிவிட்டது.

    • சின்னமுட்டத்தில் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்
    • மீன்பிடிவலைகளையும் மீனவர்கள் தயார்படுத்துகிறார்கள்

    கன்னியாகுமரி, ஜூன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல்மாதம் 15-ந்தேதிமுதல் தடை அமுலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் இன்றுநள்ளிரவுடன் முடிவடையஉள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த மீன்பிடி தடை காலம் முடிவடைய உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்னமுட்டத்தில் உள்ள படகுகட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் பச்சை நிற வர்ணம் தீட்டுவது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.இந்த விசைப்படகுகள் நாளை இரவு 9 மணிமுதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்றே களைகட்ட தொடங்கி விட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 37,986 பேருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி கடந்த ஆண்டை விட 3 ஆயிரம் போ் அதிகமானது.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 15 முதல் வரும் ஜூன் 14-ந்தேதி இரவு வரையில் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடிப்பை தடை செய்து அரசு அறிவித்துள்ளது. 

    அதனடிப்படையில் கடலோர வல்லம் மீன்பிடிப்பு தவிர விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 365 மீனவா்கள் தடைக்காலத்தில் மீன்பிடி தொழில் இன்றி பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

    அவா்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் மொத்தம் ரூ90.10 கோடி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 37ஆயிரத்து 986 மீனவா்களுக்கு நடப்பு ஆண்டில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

     கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் போ் அதிகமாக நிதி பெறுவதாக மீன்வளத்துறை மாவட்ட துணை இயக்குநா் காத்தவராயன் தெரிவித்தாா்.

    ×