என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடுஜீவிதம்"
- 54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில விருதுக்கான பட்டியலை இன்று வெளியானது.
- ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில திரைப்பட விருதுக்கான பட்டியலை இன்று திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார விவகாரதுறை அமைச்சர் சஜி செரியன் இன்று வெளியிட்டார்.
சிறந்த நடிகருக்கான விருதை பிரித்விராஜ் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
இந்தாண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்காக மிக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார் பிரித்விராஜ்.
இப்படத்திற்காக உடல் எடை குறைத்து , உண்மையில் அந்த பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதனாக நடித்து இருப்பார். திரைப்படம் தற்பொழுது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருதை `உள்ளொழுக்கு' படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளொழுக்கு. மாமியார் மற்றும் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தனர். இப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிளெஸ்ஸி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் வென்றுள்ளது.
ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற திரைத்துறைக்கான விருதுகளின் பட்டியல்
சிறப்பு குறிப்பு-அபிநயா கிருஷ்ணன் (ஜெய்வம்) கே ஆர் கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)
சிறப்பு நடுவர் (நடிப்பு) - கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)
சிறப்பு ஜூரி படம் - ககனாச்சாரி
சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவ்)
பிரபலமான படம் - ஆடுஜீவிதம்
நடனம் - விஷ்ணு (சுலைகா மன்சில்)
சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடாருன்னு)
சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (உள்ளொழுக்கு), சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)
ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சகடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)
ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)
ஒத்திசைவு ஒலி - ஷமீர் அகமது (ஓ பேபி)
கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)
எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்தர்)
பின்னணிப் பாடகி (பெண்) - ஆனி ஆமி (மங்களப்பூழுக்கும் - பசுவும் அற்புதவிளக்கும்)
பின்னணிப் பாடகர் (ஆண்) - வித்யாதரன் மாஸ்டர் (பத்திரநானொரு கனவில் - ஜனம் 1947 - பிராணயம் துடருன்னு)
சிறந்த இரண்டாவது படம் - இரட்டை
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
- ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிருத்விராஜ் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததோடு, ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் வரை பட்டினி கிடந்து நடத்திருந்தார். நீண்ட காலம் தயாரிப்பு பணியில் இருந்த ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.
அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.
இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது
- இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.
பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.
படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.
மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
- மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியது.
மார்ச் 15 ஆம் தேதி தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. பெருமளவு இளைஞர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் வசூலை முறியடித்து மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது. பிரேமலு திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
- சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.
பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், சோபா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்'.
2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு படபிடிப்பை தொடங்கிய ஆடு ஜீவிதம் படக்குழுவினர், 2023 ஆம் ஆண்டில் படபிடிப்பு பணிகளை முடித்தனர். மலையாள சினிமாவில் ஆடுஜீவிதம் படமே மிக நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்த படமாகும்.
கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரித்விராஜ் நேற்று தெலுங்கு திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களை ஆடுஜீவிதம் படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைத்து இருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை தெலுங்கு மொழியில் விநியோக உரிமையைப் பெற்றது.
சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆடுஜீவிதம் படத்தின் "ஓமானே" பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.
மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு படத்திற்கு பிறகு வெளியாகும் மலையாளப் படம் இதுவே. அதனால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
- இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது
மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.
அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.
இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்