'ஆடுஜீவிதம்' படத்திற்காக ஹாலிவுட் இசை மீடியா விருதை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்

ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிரித்விராஜ் வென்றார்.
'ஆடுஜீவிதம்' படத்திற்காக ஹாலிவுட் இசை மீடியா விருதை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்
Published on

இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) 'ஆடுஜீவிதம்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com