ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
Published on

இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிருத்விராஜ் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததோடு, ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் வரை பட்டினி கிடந்து நடத்திருந்தார். நீண்ட காலம் தயாரிப்பு பணியில் இருந்த ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com