search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prithviraaj kumar"

    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    ×