ஓடிடி ரிலீசுக்கு ரெடியான பிரேமலு - எப்போ தெரியுமா?

உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ஓடிடி ரிலீசுக்கு ரெடியான பிரேமலு - எப்போ தெரியுமா?
Published on

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியது.

மார்ச் 15 ஆம் தேதி தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. பெருமளவு இளைஞர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

நடிகர் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் வசூலை முறியடித்து மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது. பிரேமலு திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com