என் மலர்
நீங்கள் தேடியது "டொவினோ தாமஸ்"
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- லோகா சாஃப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- லோகா சாஃப்டர் 2 படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் எம்புரான் பட வசூலை கடந்து மலையாளத்தில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
இந்நிலையில், லோகா சாப்டர் 2 படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கவுரவ விருதாகும்.
- ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.
- கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பதை இச்செய்தியில் பார்க்கலாம்.
கலியுகம்
ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.இப்படம் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியுள்ளது.இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கலியுகம் படத்தை அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.
டான் வின்சண்ட் இசையை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நரிவேட்டை
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மூன்வாக்
கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வினோத் ஏ.கே இயக்கியுள்ளார்.இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருநாத், சிபி குட்டப்பன் மற்றும் சுஜித் பிரபஞ்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Mr & Mrs Bachelor
மலையாள இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Mr & Mrs Bachelor திரைப்படம். ஒரு பணக்கார வீட்டு பெண் அவளது திருமணத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். அப்போது எதிர்பாராத விதமாக இவர் இந்திரஜித் சுகுமாரனை சந்திக்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Mr Rani
ராஜா என்பவர் கதாநாயகனாக ஆக ஆசைப்படுகிறார். ஆனால் அவர் நாயகியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இப்படத்தில் தீபக் சுபிரமன்யா மற்றும் பார்வதி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கன்னட மொழி திரைப்படம் லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிறது.
8 Vasantalu
அனந்திகா சனில்குமார் , ரவி டுக்கிர்லா மற்றும் ஹனு ரெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 8 Vasantalu என்ற தெலுங்கு திரைப்படம். இப்படத்தை பனின்ற நர்செட்டி இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.
திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் மே 16 ஆம் தேதியாக இருந்தது. ஆனால் தற்பொழுது சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்று மலையாளத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த டிடெக்டிவ் உஜ்வாலன் மற்றும் ரஞ்சித் சஞ்சீவ் நடித்த யுனைடட் கிங்டம் ஆஃப் கேரளா மற்றும் அசாதி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் டொவினோ தாமஸ் முக்கியமானவர்.
- மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் டொவினோ தாமஸ் முக்கியமானவர். இவர் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இந்தாண்டு தொடக்கத்தில் இவர் நடித்த `ஐடெண்ட்டி' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ARM மற்றும் அன்வேஷிப்பின் கண்டேதும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான `2018' திரைப்படத்தை தைவானில் நடைப்பெற்ற தி கோல்டன் ஹார்ஸ் ஃபெண்டாஸ்டிக் பிலிம் ஃபெஸ்டிவல் {TGHFF} திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் கேரளாவில் நடந்த வெள்ள பெருக்கில் மக்கள் எவ்வாறு இருந்தனர் ஒருவருக்கொருவர் எவ்வாறு காப்பாற்றும் குணமுடையவர்களாக இருந்தனர் என்பதை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்ட படமாகும். 2018 திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களுள் ஒன்றாகும்.
திரைப்படவிழாவில் படத்தை பார்த்த பிறகு மக்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி படத்திற்கு மரியாதை செலுத்தினர். இத்திரைப்பட விழாவில் படத்தின் கதாநாயகானான டொவினோ கலந்துக்கொண்டார். அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு மலையாள சினிமாவின் ஒரு வெற்றியாகும்.
- டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.
உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- டொவினோ தாமஸ் அடுத்ததாக நரிவேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- 2012ல் அறிமுகமான டொவினோ பல மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
- "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்
தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
சில நேரங்களில், ஒரு சில ரசிகர்கள் வினோதமான கோரிக்கைகளை தங்களுக்கு பிடித்தமான திரைப்பிரபலங்களுக்கு வைப்பதும், அதற்கு அந்த பிரபலங்கள் பதிலளிப்பதும், இணையத்தில் சுவாரஸ்யமாக செய்திகளாக பரவி வருகின்றன.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் (Tovino Thomas). 2012ல் திரையுலகில் அறிமுகமான டொவினோ பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

டொவினோ தாமசிற்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்து ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அந்த ரசிகர், "எனது வீடியோவை டொவினோ தாமஸ் பார்த்து விட்டு, அதற்கு கமென்ட் (comment) பதிவிட்ட பிறகுதான் நான் எனது தேர்விற்கு படிக்க தொடங்குவேன்" என பதிவிட்டு, டொவினோ தாமசின் ஐடி-யையும் டேக் (tag) செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட டொவினோ தாமஸ், "போய் படி மகனே" என பதிலளித்தார்.
இதே போல் ஒரு ரசிகை, நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) பெயரை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார்.

2012ல் "பெருமான்" எனும் தமிழ் திரில்லர் திரைப்படத்தில் அறிமுகமாகி "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் அர்ஜுன் தாஸ்.

அவருக்கு அந்த ரசிகை, "அர்ஜுன் தாஸ் எனது வீடியோவை பார்த்து, அது குறித்து கமென்ட் அளித்த பிறகுதான் நான் நீட் முதுநிலை (NEET PG) தேர்விற்கு தயாராக தொடங்குவேன்" என பதிவிட்டு அர்ஜுன் தாஸ் ஐடி-யையும் டேக் செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட அர்ஜுன் தாஸ், "டாக்டர், நீங்கள் முதுநிலை தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்ததும் எனக்கு ட்ரீட் (treat) வைக்க வேண்டும். (விளையாட்டிற்கு கூறினேன்). நீங்கள் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தேர்வில் வெல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்" என பதிலளித்தார்.
இரண்டு வெவ்வேறு ரசிகர்களின் வித்தியாசமான கோரிக்கைகளும், திரைப்பிரபலங்களின் பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.






