என் மலர்

  நீங்கள் தேடியது "basil joseph"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வீரன்’.
  • இப்படம் ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

  இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


  வீரன் -மின்னல் முரளி

  'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து 'வீரன்' திரைப்படம் மலையாளத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'மின்னல் முரளி' படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


  பசில் ஜோசப் -ஏ.ஆர்.கே.சரவணன் -ஹிப்ஹாப் ஆதி

  இந்நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மின்னல்' முரளி இயக்குனர் பசில் ஜோசப்புக்கு நேரடியாக வீடியோ கால் செய்து அவரிடமே விளக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜாலியாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  'வீரன்' திரைப்படம் நாளை (ஜூன் 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மலையாள திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ’பாசில் ஜோசப்’.
  • இவர் நடித்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  மலையாள திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பாசில் ஜோசப். இவர் 'குஞ்சி ராமாயணம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 'கோதா', 'மின்னல் முரளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் 'மின்னல் முரளி' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இவருக்கான இடத்தை கொடுத்தது.


  பாசில் ஜோசப்

  கடந்த ஆண்டு விபின் தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் வெளியான 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் பாசில் ஜோசப் - எலிசபெத் தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

  இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள பாசில் ஜோசப், "எங்கள் குட்டி தேவதை வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி! அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களைத் திருடிவிட்டாள். அவள் வளர்ச்சியையும் அவளிடமிருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் கற்றுக் கொள்வதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


  ×