அல்லு அர்ஜுனை இயக்கும் பசில் ஜோசஃப்?

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுனை இயக்கும் பசில் ஜோசஃப்?
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மரணமாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பசில் ஜோசஃப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போழுது அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com