வீரன் திரைப்படம் மின்னல் முரளியின் காப்பி இல்லை - பிரபல மலையாள இயக்குனர் விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வீரன்’.இப்படம் ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
 பசில் ஜோசப்
 பசில் ஜோசப்
Published on

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வீரன் -மின்னல் முரளி

'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து 'வீரன்' திரைப்படம் மலையாளத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'மின்னல் முரளி' படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

பசில் ஜோசப் -ஏ.ஆர்.கே.சரவணன் -ஹிப்ஹாப் ஆதி

இந்நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மின்னல்' முரளி இயக்குனர் பசில் ஜோசப்புக்கு நேரடியாக வீடியோ கால் செய்து அவரிடமே விளக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜாலியாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

'வீரன்' திரைப்படம் நாளை (ஜூன் 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com