search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Tovino Thomas"

  • 2012ல் அறிமுகமான டொவினோ பல மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
  • "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்

  தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

  சில நேரங்களில், ஒரு சில ரசிகர்கள் வினோதமான கோரிக்கைகளை தங்களுக்கு பிடித்தமான திரைப்பிரபலங்களுக்கு வைப்பதும், அதற்கு அந்த பிரபலங்கள் பதிலளிப்பதும், இணையத்தில் சுவாரஸ்யமாக செய்திகளாக பரவி வருகின்றன.

  மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் (Tovino Thomas). 2012ல் திரையுலகில் அறிமுகமான டொவினோ பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


  டொவினோ தாமசிற்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்து ஒரு பதிவை வெளியிட்டார்.


  அதில் அந்த ரசிகர், "எனது வீடியோவை டொவினோ தாமஸ் பார்த்து விட்டு, அதற்கு கமென்ட் (comment) பதிவிட்ட பிறகுதான் நான் எனது தேர்விற்கு படிக்க தொடங்குவேன்" என பதிவிட்டு, டொவினோ தாமசின் ஐடி-யையும் டேக் (tag) செய்திருந்தார்.

  இந்த பதிவை கண்ட டொவினோ தாமஸ், "போய் படி மகனே" என பதிலளித்தார்.

  இதே போல் ஒரு ரசிகை, நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) பெயரை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார்.


  2012ல் "பெருமான்" எனும் தமிழ் திரில்லர் திரைப்படத்தில் அறிமுகமாகி "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் அர்ஜுன் தாஸ்.


  அவருக்கு அந்த ரசிகை, "அர்ஜுன் தாஸ் எனது வீடியோவை பார்த்து, அது குறித்து கமென்ட் அளித்த பிறகுதான் நான் நீட் முதுநிலை (NEET PG) தேர்விற்கு தயாராக தொடங்குவேன்" என பதிவிட்டு அர்ஜுன் தாஸ் ஐடி-யையும் டேக் செய்திருந்தார்.

  இந்த பதிவை கண்ட அர்ஜுன் தாஸ், "டாக்டர், நீங்கள் முதுநிலை தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்ததும் எனக்கு ட்ரீட் (treat) வைக்க வேண்டும். (விளையாட்டிற்கு கூறினேன்). நீங்கள் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தேர்வில் வெல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்" என பதிலளித்தார்.

  இரண்டு வெவ்வேறு ரசிகர்களின் வித்தியாசமான கோரிக்கைகளும், திரைப்பிரபலங்களின் பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.

  • மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ்.
  • இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

  மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் மாயா நதி, மின்னல் முரளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான '2018' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


  இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் 'இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி' என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.


  நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் செப்டிமியஸ், சிறந்த ஆசிய திரைப்பட நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள டோவினோ தாமஸ், "ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மை தாக்கி பெருவெள்ளத்தால் கேரளா விழத் தொடங்கியது. பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018 படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய செப்டிமியஸ் விருது குழுவுக்கு நன்றி. இந்த விருது கேரளாவுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.


  • நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
  • இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


  இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

  இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.  • ’வணங்கான்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
  • இவர் தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

  தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி 'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'ஷியாம் சிங்கா ராய்', 'தி வாரியர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


  கீர்த்தி ஷெட்டி - டோவினோ தாமஸ்

  இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.


  அஜயந்தே ரண்டம் மோஷனம் போஸ்டர்

  இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. மேலும், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • நடிகர் காலித், பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
  • இவர் படப்பிடிப்பின் போது திடீரென மரணமடைந்தார்.

  கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகர் காலித். மலையாள பட நகைச்சுவை நடிகரான இவர் 1973-ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தாப்பானா, வெள்ளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

  ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படத்திற்காக கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் காலித் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பின் இடையில் கழிவறை சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.


  நடிகர் காலித்

  மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் காலித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு காலித் ரகுமான், ஷைஜூ காலித் மற்றும் ஜிம்ஷி காலித் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் காலித் ரகுமான் மலையாள பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார். மற்ற 2 பேரும் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.

  மரணமடைந்த நடிகர் காலித்துக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. 

  யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.  தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. மேலும் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  ரவுடி பேபி பாடல்:

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். பாடலும் பெரிய வைரலாக பரவியது.

  மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இருந்து வந்தது. இதுவும் ‘3’ படத்துக்காக தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்து உருவாக்கியது. இந்த பாடல் தற்போது வரை சுமார் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த சாதனையை ‘ரவுடி பேபி’ வீடியோ பாடல் உடைத்துள்ளது.  தற்போது 183 மில்லியன் பார்வைகளோடு, தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ வீடியோ பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையையும் இன்று காலை 183 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதன் மூலம் தகர்த்தது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெளியான 2 வாரங்களில் யூடியூப்பில் 10 கோடி பார்ரைவயாளர்களை பெற்றுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், சுமார் 2 வாரங்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்த பாடலுக்கு 10 லட்சம் லைக்சும் கிடைத்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இந்த படத்தில் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி, உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம், எல்லா புகழும் இறைவனுக்கே' என்று குறிப்பிட்டுள்ளார்.


  பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை முந்தியுள்ளது. ஆளப்போறான் தமிழன் யூடியூப்பில், 9 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரவுடி பேபி பாடல் தற்போது வரை 9 கோடியே 65 லட்சத்தை தாண்டியுள்ளது. விரைவில் 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வீடியோ பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.  முன்னதாக, தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் பில்போர்டில் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக ரவுடி பேபி இடம்பிடித்திருந்தது. பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

  பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  ரவுடி பேபி வீடியோ பாடல்:

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
  மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

  தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.  போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

  மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

  இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.  கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

  மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.  தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

  முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.  யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi